கோவில்பட்டியில், வீட்டுப் படியிலிருந்து தவறி விழுந்து காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்குத் திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி பார்வதி (42). இவர், சம்பவதத்தன்று வீட்டுப் படிக்கட்டிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.
காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரை நடத்தி வருகின்றனர்.


