அரசர்குளம் வெங்கிடாசலபதி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கடந்த 10 ந்தேதி மங்கள இசை, புணயாஹவாசம், யஜமானன் சங்கல்பம், கணபதி ஹோமம், வாஸ்த்து ஹோமம், பவத் பிரார்த்தனை, கும்பபூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, புண்யாஹவாசம், அங்குரார்பணம், மிருத்ஸஸ் கிருஹணம், சித்ராது கும்கலாகர்ஷணம் யாக சாலை பிரவேசம், ரக்ஷாபந்தனம் முதல் கால யாக வேள்வி ஆரம்பம், திக்பலி, பூர்ணாஹீதி கோஷ்டி விநியோகம் நடந்தது- 11 ந் தேதி மங்கள இசை, விஸ்வரூபம், புண்யாஹவாசம், கும்பதிருவாராதஸம், இரண்டாம் யாகவேள்வி ஆரம்பம், பூர்ணாஹீதி கோஷ்டி விநியோகம் மாலை 5 மணிக்கு மங்கள இசை, புண்யாஹவாசம், கும்பத்திருவாராதஸம், மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம் அக்ஷின் மேஷனம் என்னும் கண்திறப்பு, பிப்ப வாஸ்த்து, பிப்ப ரச்ஷாபந்தனம் பூர்ணாஹீதி கோஷ்டி விநியோகம் நடைபெற்றது.
12 ந்தேதி காலை மங்கள இசை புண்யா ஹவாசம், நான்காம் கால யாகவேள்வி ஆரம்பம், காலை 6 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி ஆரம்பம், காலை 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பம் புறப்பாடு, பெருமாளுக்கும் ,பத்திரகாளி அம்மனுக்கும் மகாகும்பாபிசேஷகம் 7.30 மகா அபிசேகம், காலை 9 மணிக்கு திருவாரதனம் பூஜைகள் தீர்த்த விநியோகம், பிரசாத விநியோகம் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிசேக ஏற்பாடுகளை கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் அர்ச்சகர் ராஜேஷ் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை அரசர்குளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
படம் உள்ளது.
அரசர்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் கும்பாபிசேஷகம் நடந்தது.
=====


