சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் வெங்கடேச பிரசன்ன பெருமாள் மற்றும் அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.
இதையொட்டி கடந்த 8 ந்தேதி மாலை குடியழைப்பு நடந்தது. 9 ந்தேதி காலையில் தீர்த்தம் எடுத்து வந்து, கலச பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல் கும்பம் ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. 10 ந்தேதி வெங்கடேச பிரசன்ன பெருமாள்கோயிலுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம், சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது.
11 ந்தேதி அம்மன் கோயிலுக்கு கொடை விழா நடந்தது. இதையொட்டி மஞ்சள் பானை போடுதல் என்னும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கொதிக்கும் மஞ்சள் தண்ணீரை சாமியாடிகள் தலையில் தெளித்து ஆடி பரவசத்தினை ஏற்படுத்தினர்.
இரவு சாமக்கொடை நடந்தது. மறு நாள் காலை படப்பு பிரித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர்.


