சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக ஸ்டீபன் இன்று பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜு திடீரென உடல் நலக் குறைவால் காலமானார. இதனை அடுத்து சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் கோவில்பட்டியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஸ்டீபன் பதவி உயர்வு பெற்று சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


