தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவரும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் A. நாராயணன் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழைப் பெண்ணுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் ஏலை எளிய மக்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் மாவட்ட பொருளாளர் சுப்பையா மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசை முத்து பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் விவசாய அணி செயலாளர் கனகராஜ் மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் மற்றும் ஜேசு செல்வி,ஜெப ராணி, ராதா லட்சுமி, ராசாத்தி,ராணி, சாந்தி, மகேஸ்வரி வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் சங்கரன், கணபதி மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவை தலைவர் மதியழகன் மாநகரத் கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் கயத்தார் புதிய செயலாளர் ஆரோக்கிய சவரி மிக்கேல் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் தனசெல்வராஜா ஒன்றிய அவைத்தலைவர் ராக்கெட் முத்து துணைச் செயலாளர் சந்திரசேகர் சாயர்புரம் நகரச் செயலாளர் புஸ்பராஜ் ஆத்தூர் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் சண்முக குமார் செல்வராஜ் ஸ்ரீகாந்த் சமூக ஆர்வலர் கணேசன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


