தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் இன்று மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதிமான கலையரசி ரீனா தலைமை வகித்தார்கள். திருச்செந்தூர் உரிமையியல் நீதிபதி பத்மப்ரியா, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன இயக்குனர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் வரவேற்புரை நிகழத்தினர்.
செயலாளர்/ முதுநிலை உரிமையியல் நீதிபதி தனது தலைமையுரையில் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சட்டம் பற்றியும், அதன் நன்மையை பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், சேப்டி மற்றும் ஹெல்த் பற்றியும், சுற்றுசூழல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்றும், மரம் நடுவதால் என்னென்ன நன்மைகள் பற்றியும், இலவச சட்ட உதவி மைய செயல்பாடு பற்றியும், இலவச தொலைபேசி எண் 15100 பற்றியும், நிரந்தர மக்கள் நீதிமன்றம் பற்றியும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றியும், 1098 சைல்டு லைன் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
நிகழ்வில் செயலாளர்/ முதுநிலை உரிமையியல் நீதிபதி முகாமில் கலந்து கொண்ட 400 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டையையும், பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்ட அட்டையும் மற்றும் சுற்று சூழலை பாதுகாக்கும் பொருட்டு 400 மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகளையும் வழங்கினார்.
முகாமில் 500-க்கு மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஊழியர்கள், மாவட்ட கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர்கள் என்று திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் ஆனந்தசெல்வன் நன்றியுரை கூறினார்.


