நாசரேத் மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலயத்தில் நடந்த அசன விருந்து நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம் நாசரேத் சேகரம் மாணிக்கவாசகபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலய 37 வது பிரதிஷ்டை விழா 4 நாட்கள் நடந்தது. முதல் 2 நாட்கள் ஆலய வளாகத்தில் மாலை 7 மணிக்கு நற்செய்தி கூட்டங்கள் நடந்தது. நாசரேத் ஜாஸ்வா டேனியல் இசையோடு விஸ்வவாணி ஊழியர் கிறிஸ்டோபர் பாடல்கள் பாடினார். ஓய்வு பெற்ற ஐஒபி மேலாளர் ஜோசப் துரைராஜ் செய்தி அளித்தார்.
3வது நாள் மாலை 6 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தேவ செய்தி கொடுத்தார். 4வது நாளான சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணி விடையாளர்கள் பொன் செல்வின் அசோக்குமார், ஹென்றி ஜீவானந்தம், சபை ஊழியர் வனமோகன் ராஜன் மற்றும் மாணிக்கவாசகபுரம் சபை மக்கள் செய்திருந்தனர்.


