கருங்குளம் நம்பிக்கையின் பாலம் சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.
திட்ட மேலாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். காமராஜர் தெரு, பாரதியார் தெரு, ஆர்.சி.கோயில் தெரு, சி.எம்.எஸ் தெரு, உள்பட பல தெருக்களில் கடை வீடுகளில் அவர்கள் நிவாரண தொகை சேகரித்தனர். அதன் பின் பிரிக்கப்பட்ட தொகையை முறைப்படி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சேகரிப்பில் சமூக சேவகி பென்சி, ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, சந்தனமாரி, பியுலா கிரேஸ், உழியர்கள் சந்திரபுஷ்பம், சுமதி உள்பட மாணவ மாணவியினர் கலந்து கொண்டனர்.


