கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் காசநோயாளிகள் மற்றும் மருந்து அளிப்பவர்களுக்கான முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் முகம்மது கனி தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர்கள் கோமதி நயினார், ராகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நம்பிக்கை மைய ஆய்வக நுட்பர் எல்சி ராணி வரவேற்றார். காசநோயாளிகளுக்கு மருந்து அளித்த கிளாக்குளம், புளியங்குளம், அய்யனார்குளம்பட்டி அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசின் ஊக்கத் தொகையை£க தலா ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. எக்ஸ்தே நுட்பநர் கிருஸ்டின் குமாரதாஸ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் ஹீரா செய்திருந்தார்.


