தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை சார்பில் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் நெய்தல் அண்டோ அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தூத்துக்குடி ஆயர் இல்ல வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர் பத்மநாதன் வரவேற்றார். வழக்கறிஞர் ராஜா அறிமுக உரை நிகழ்தினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாழ்த்தி பேசினார். தமிழ்ச்செம்மல் விருது பெற்ற நெய்தல் அண்டோ அவர்களுக்கு ஏற்புரையாற்றினார். அதன் பின் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் செல்வி எழுதிய அகல் விளக்கு கவிதைத் தொகுப்பு நூல் திறனாய்வு நடந்தது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் முத்துசாமி, தமிழாசிரியர் முருகன், அருட்தந்தை செல்வராசு ஆகியோர் நூலை திறனாய்வு செய்தனர். நூலாசிரியர் செல்வி ஏற்புரை வழங்கினார். ஓய்வு பெற்ற கருவூலத்துறை அதிகாரி செய்யது முகமது ஷெரிப் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளைதொடுவானம் கலை இலக்கியப்பேரவை தலைவர் நெல்லை தேவன் தலைமையில் பேரவையினர் செய்திருந்தனர்.


