தென்காசி மாவட்டம் இடைகால் மெரிட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பஞ்சாரம் எனும் நூல் வெளியிட்டு விழா நடந்தது. இந்த நூலில் மெரிட் கல்லூரி மற்றும் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எழுதிய 37 சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருந்தது. இந்த நூல் வெளியிட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் எட்வின் லாரன்ஸ் வரவேற்றார். பேராசிரியர் சிவ பார்வதி சிறப்பு விருந்தினர் முத்தாலங்குறிச்சி காமராசுவை அறிமுகப்படுத்தி பேசினார். நூலை முனைவர் உஷாராணி அறிமுகம் செய்தார். முதல் பிரதியை வெளியிட்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். முதல் பிரதியை கல்விக்குழுமம் இயக்குனர் ராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார். துணை முதல்வர் முனைவர் காளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.



