ஆழ்வார்திருநகரியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருச்செந்தூரில் இருந்து ஆழ்வார்திருநகரி வந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த 16ம் தேதி காலமானார். அவரது அஸ்தி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டு முக்கிய நதிகளில் கரைக்கப்படுகிறது. இதன் படி அவரது அஸ்தி வாகனம் தூத்துதுக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு இன்று காலை வந்தது. பின்னர் அங்கிருந்து குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரி வந்தது.
ஆழ்வார்திருகரியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக.,வினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் உட்பட பொதுமக்கள் வாஜ்பாய் அஸ்திக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஸ்தி வாகனம் ஆழ்வார்திருநகரியில் இருந்து செய்துங்கநல்லூர், வி.எம்.சத்திரம், திருநெல்வேலி, கண்ணியாகுமரி செல்கிறது. அங்கு முக்கடல் சங்கமமாகும் இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படுகிறது.


