தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் சேகரிக்கப்பட்டு புதிதாக பிறந்துள்ள ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கடலில் விட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதியில் இன்று வனத்துறை சார்பில் புதிதாக பிறந்துள்ள ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கடலில் விட்டார். மேலும் வனத்துறை சார்பில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் குஞ்சு பொரிப்பகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும் போது “ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் ஆமைகள் திருச்செந்தூர் மணப்பாடு கடற்கரை பகுதிகளில் முட்டையிடும். இந்த முட்டைகளை வனத் துறையினர் பாதுகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுவார்கள். இந்த ஆண்டும் 11 இடங்களில் ஆமைகள் முட்டையிட்டன. இதில் 1940 முட்டைகள் இட்டதில் தற்போது 170 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
இந்த குஞ்சுகள் பசிபிக்கடல் வரை செல்லும் மீண்டும் முட்டையிடுவதற்காக இதே பகுதிக்கு வந்து விடும் ஆமைகள். அதிகளவு குஞ்சு பொரிக்க வருவதால் இது பாதுகாப்பான பகுதி என்று வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள் என ஆட்சியர் கூறினார் இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


