தூத்துக்குடி மாவட்டத்தில் 107 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 711 மாணவர்கள், 11 ஆயிரத்து 283 மாணவிகள் என மொத்தம் 21ஆயிரத்து 994 பேர் எழுதுகின்றனர். 199 முதன்மை கண்காணிப்பாளர்கள், 199 துறை அலுவலர்கள், 2,699 அறை கண்காணிப்பாளர்கள், 297 நிலையான படையினர், 507 சொல்வதை எழுதுபவர், 46 வழித்தட அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 394 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போதுமான இடவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


