தூத்துக்குடியில் கோடைகாலத்தை முன்னிட்டு டூவிபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது..
தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோடைகாலத்தை முன்னிட்டு குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாவட்ட தலைவர் பால்ராஜ் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல் தலைவர் லிங்க செல்வம், சொக்கலிங்கம், மாரியப்பன் ராஜா, சிஎம் மாரியப்பன், முருகேசன், முத்து பெரியநாயகன், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சி உறுப்பினர் ஆர் காசிலிங்கம் செய்திருந்தார்.


