செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவன் ஆலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆயலம். இந்த ஆலயத்தில் தற்போது கும்பாபிசேக பணிக்காக திருப்பணி நடந்து வருகிறது. இந் நிலையில் இந்த ஆலயத்தில் பதஞ்சலி குருபூஜை மற்றும் 108திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் , அலங்காரம் நடந்தது. அதன் பின் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு மேல் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கான பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்து ராமனும், விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் மற்றும் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மீக பேரரவையினர் செய்திருந்தனர்.


