செய்துங்கநல்லூர் ஜமாத் சார்பில் முகைதீன் ஜாமியா மஸ்ஜித் பள்ளி வாசலில் சமுக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. ஜமாத் தலைவர் அன்வர்தீன் தலைமை வகித்தார். பா.ம.க மாநில துணைத்தலைவர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலி முன்னிலை வகித்தார். ஜமாத் பொருளாளர் ஜிந்தா சேக் அப்பாஸ் வரவேற்றார். முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஹசன் ஞானியார் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் சுரேஷ் தேவர், தமிழர் விடுதலை களம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில இணைச்செயயலாளர் ஓ.பி. முஸ்தபா, புனித லூசியா ஆலய அருட்தந்தை ஜாக்சன், தொழில் அதிபர்கள் இம்ரான்கான், நாசர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் பேசினர்.

நிகழ்சியில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ஜீன்குமார், கருங்குளம் அட்மா சேர்மன் குமார், விட்டிலாபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயபதி என்ற பசுபதி, சிவன்கோயில் அறங்காவலர் குரு மாரியப்பன், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் தோணி அப்துல் காதர், புதிய தமிழகம் நெல்லை மாவட்ட துணை செயலாளர் குமார், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் அமராவதி கண்ணன், அ.ம. மு.க. செயலாளர் திருவரங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் முருகன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஐயப்பன், தி.மு.க கருங்குளம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். எஸ்.டி.பி. ஐ.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபு ஹீபைஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் முகைதீன் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள் செய்திருந்தனர்


