தாமிரபரணியில் மீன்கள் கணக்கெடுக்கும் பணி 7 இடங்களில் நடந்தது. ஏ.ட்ரீ சார்பில் நடந்த இந்த பணி பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடை மருதூர், கோபாலசமுத்திரம், சீலப்பேரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் நடந்தது. வலை போட்டு மீன்களை பிடித்து அதை வகைகள் ஆராயப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.
கருங்குளத்தில் மூத்து ஆய்வாளர் கணேஷ், ஆய்வாளர் வினோத் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தன்னார்வலர்கள் மகராசி, அபிதா வும் கணக்கெடுப்பில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வில் உலகத்திலேயே தாமிரபரணியில் மட்டும் வாழும் தாமிரபரணி கெண்டை, மற்றும் £க்காச்சி, வெளிச்சிமுண்டக்கண்ணி, சேவல்கெண்டை உள்பட 16 வகை மீன்கள் கணக்கெடுக்கப்பட்டன. ஆக்கிரமப்பு மீன்களான ஆபிரிக்கன் தேளி, டேங்க் கிளீனர், ஜிலேபி போன்ற இனங்களும் காணப்பட்டன.


