கோவில்பட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகர் ராமசாமி தெருவை சேர்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். நேற்று வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, குழந்தைக்கு தொட்டில் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு வெளியே சென்றாராம்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், மூப்பன்பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியிலுள்ள மரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கிழக்கு காவல் நிலைய போலீசார், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


