செய்துங்கநல்லூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக சார்பில் இளைஞரணி அமைப்பாளர் குமார், டாக்டர் கலில் ரகுமான், மு.பட்டன். கொம்பையா, சிவாஜி, அப்துல் காதர், சுடலைமணி, அருணா, முருகன், திருவரங்கம், தாமஸ் பூபாலராயன், சக்தி, மதிமுக ஒன்றிய செயலாளர் காலங்கரை கந்தசாமி, ஆத்தியப்பன், மனித நேய மக்கள் கட்சி மோத்தி, காங்கிரஸ் சார்பில் தாடி மாரியப்பன், த.ம.க சார்பில் ஒன்றிய தலைவர் நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தலைவர் அய்யாக்குட்டி, பொருளாளர் பால்சாமி, செயற்குழு உறுப்பினர் சுடலைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூரில் மிகவும் பிரபலமான புதன்கிழமை சந்தை, கருணாநிதி மறைவையட்டி அடைக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மாலை 4 மணி அளவில் அனைத்து கட்சியினரும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊ-ர்வலம் நடத்தினர்.


