தூத்துக்குடி பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தை கண்டித்து ஊழியர்கள் இரண்டாம் நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எந்தவித முன் அறிவிப்புமின்றி அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் மற்றும் எந்தவித பலன்களும் தராமல் ஏமாற்றி ஓட நினைக்கும் பிஎஸ்ஏ சிகால் என்ற சிங்கப்பூர் கம்பெனியின் தொழிலாளர் விரோத அராஜக போக்கை கண்டித்து ஊழியர்களின் இரண்டாம் நாள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.


