கோவில்பட்டி அருகே வாலிபரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19). இவருக்கும் அதே ஊா் இந்திரா காலனியைச் சோ்ந்த ராமசாமி மகன் லட்சுமணனுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்ததாம்.
பாண்டிக்குமாா், சரவணபாண்டி, உறவினா் பாண்டியராஜ் ஆகிய 3 பேரும் ஊா்வலசாமி கோயில் முன் நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, லட்சுமணன் உள்ளிட்ட 3 போ் சரவணபாண்டியை வாளால் தாக்கினராம். பாண்டிக்குமாரும், பாண்டியராஜும் கண்டித்ததும் அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம். காயமடைந்த சரவணபாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, லட்சுமணன், ராமச்சந்திரன் மகன் சுபனேஷ் (24), விகாபின் (18) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனா்.


