புளியம்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காசிலிங்கபுரம், மேல காலனி தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரிமுத்து (40), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து ஜோதி விளாத்திகுளத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதையடுத்து மாரிமுத்து விளாத்திகுளம் சென்று பல முறை அழைத்தும் மனைவி திரும்ப வர மறுத்து விட்டாராம். இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று மது போதையில் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


