தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும், எம்பள்ளித் தலைவருமான இ.பாலு நம் தேசியக் கொடியை ஏற்றி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையும் ஆற்றினார். பள்ளிச்செயலர் டி.எஸ்.பிரேம்சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் லெ.பாபு ராதாகிருஷ்ணன்,கீரின் ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் செந்தில்நாயகம் மற்றும் நிர்வாகக் குழுவினர் கலந்து கொண்ட இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தேசத் தலைவர் தம் தியாகங்களை நினைவூட்டும் விதமாக அருமையான தமிழ், ஆங்கில உரையும், நாட்டுப்பற்றை விளக்கும் விதமாக அழகுக்கவிதையும் தந்து மாணவர்கள் அசத்தினர். “நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்” என்னும் தலைப்பில் இந்தியாவின் வளர்ச்சியை விளக்கும் தமிழ் நாடகம் ஒட்டு மொத்தப் பார்வையாளர்களையும் கவர்ந்தது. விழழவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


