மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தேசிய கொடி ஏற்றி வைத்து வாழ்த்தி பேசினார்.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய் ஷெலின் சர்மிளா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தேசிய கொடி ஏற்றி வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கருத்துரை வழங்கினார்.
விழாவிற்கு கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள்கே.சி. சண்முகப்பிரியா, ஜெய கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க துணைப் பொதுச் செயலாளர் தொழிலதிபர் செ. செல்வகுமார், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, மதர் சமூக சேவை நிறுவன பணியாளர் சின்னதுரை, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் திரளானோர் கலந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்


