சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி நாற்கரம் பதிப்பகம் வெளியிட்ட கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் நூலை வெளியிட்டார். பாண்டிச்சேரி மாநில அரசுசெயலாளர் சுந்தரேசன் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொண்டார். அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாற்கரம் பதிப்பக உரிமையாளர் நல்லு லிங்கம் வரவேற்றார். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், கரிசல் இலக்கிய மீடியா மகேந்திரன்,எழுத்தாளர் காமராசு செல்வன், வக்கீல் சுசீல்குமார், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


