சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்ட செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்தார். முன்னதாக சென்னையில் உள்ள புத்தககண்காட்சியில் 45,46 தினமலர் ஸ்டாலில் சாகித்ய அகடாமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் ராம் தங்கம் இந்த நூலை வெளியிட, தோரணமலை முருகன்கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் பெற்றுக்கொண்டார். துணை மேலாளர் ரவி வரவேற்க, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் சதீஷ் ,ஊடகவியாளர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் காமராசு செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வேளையில் தினமலர் ஸ்டாலுக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூலை வாசகர்களிடம் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அதன் பின் காமராசுசெல்வன் எழுதிய குடிமவன் நாவலும் அவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. தாமரை பிரதர்ஸ் வெளியிட்ட கோளறு பதிகம், செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம், இறை இடம் இவர், ரத்தத்தின் ரத்தமே ஆகிய புத்தங்களை அவர் பணம் செலுத்தி வாங்கி சென்றார்.


