வல்லநாடு வசவப்பபுரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.முக. இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் வல்லநாட்டில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்துக்கு வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகன், தலைமை கழக பேச்சாளர் மதுரை ஜீவா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமஜெயம், அனஸ், ஜோதிராஜா, ஜனகர், நடராஜ், மற்றும் ஒன்றிய இளைஞரனி அமைப்பாளர் ராமசாமி, ஊராட்சி கழக செயலாளர் வெங்கிடசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


