தூத்துக்குடி மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் முழுவீச்சில் அனைத்து பணிகளும் நடைபெறுகின்றன என நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாக இயக்குனர் எஸ்.சிவராசு தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறுகையில் அதிக அளவில் மழை பெய்ததால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதில் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி பல்வேறு கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 60 வார்டு பகுதிகளிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல பகுதிகளில் சிறிய மோட்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பெரிய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை முழுமையாக செய்வதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் தங்களது பகுதிகளில் என்ன தேவை என்பதை உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதன்படி பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் உணவுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உதவிகளையும் முழுமையாக செய்து கொடுப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது. அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு விரைவாக மக்கள் சகஜ நிலைக்கு வருவதற்கான பணிகளை தொடர வேண்டும், அதே போல் 16 17 18 வார்டு பகுதிகளில் தாழ்வான காலி மணைகளில் தேங்கிய மழைநீரால் அப்பகுதியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பக்கிள் ஓடையில் நீர் வரத்து சற்று குறைந்ததும் அப்பகுதியில் உள்ள நீா் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மின்மோட்டார்கள் மூலம் விரைவாக அப்புறப்படுத்தி அனைத்து தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கு வழி வகை செய்யப்படும் என்றார்.
பின்னா் மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் வெளியேற்றும் பணிகளை பக்கிள் ஓடை, ஆட்சியர் அலுவலகம், உள்பட பல்வேறு பகுதியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் எஸ்.சிவராசு தலைமையில் பார்ைவயிட்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தாா். உடன் ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் பிரபு, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


