விளாத்திகுளம் அருகே ஆற்றுப்பாலத்தில் கீழே விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் மல்லவ நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் கோபால் என்பவர் காவல் துறையால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை தாண்டி வைப்பாரின் தரைப் பாலத்தின் வழியே செல்லும்போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த உடன் துரிதமாக விரைந்த விளாத்திக்குளம் தீயணைப்பு துறையினர் அவரை கயிறுமூலம் கட்டி மீட்டனர்.
மீட்கப்பட்ட நபருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி செய்யப்படுவதற்கு விளாத்திகுளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது நலமாக உள்ளார். விரைவாக ஆற்றில் தவறி விழுந்த நபரை துரிதமாக காப்பாற்றிய தீயனைப்புத் துறையினருக்கும், வருவாய்த் துறையினரையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


