தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை மருதூர் அணையில் இருந்து கடலுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீரை வறட்சி பகுதியான உடன்குடி, சாத்தான்குளம் பகுதிக்கு திருப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மெஞ்ஞானபுரம் சடையனேரி பகுதியில் 450 கன அடி தண்ணீர் செல்கிறது. கூடுதலாக தண்ணீர் திறந்து சடையனேரி, வைரவன் தருவை, புத்தன் தருவை ஆகிய பகுதியில் உள்ள குளத்தினை நிரப்ப வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


