தூத்துக்குடி நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக பல முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருள்கள், உணவுகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி கேம்ப் 1 புனித தாமஸ் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். முன்னதாக அவர் கோரம்பள்ளம் குளத்தில் மதகு , வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோரம்பள்ளம் பகுதியை பார்வையிட்டார்.


