தாமிரபரணி ஆற்றில் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இந்த அணையில் ஸ்ரீவகுண்டம் வடகால், தென்கால் மற்றும் வெளியேறும் தண்ணீர் அளவு ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரியுடன் ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டார். அவருடன் உமரி சங்கர் உள்பட பலர் இருந்தனர்.


