தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அவர் ஆழ்வார்திருநகரி பகுதியில் மணல் குண்டு, கக்கன் நகர், ஆகிய பகுதியில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்ய அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அவருடன் உமரி சங்கர் உள்பட பலர் உடன் வந்தனர்.


