தாமிரபரணி ஆற்றில் கடைகோடியில் உள்ளது ஆத்தூர். இந்த ஊரில் தூத்துக்குடி &திருச்செந்தூர் மெயின் ரோடு உள்ளது. இங்கு பழமையான தரைப்பாலம் ஒன்று உண்டு. இந்த பாலத்துக்கு பதிலாக மிகப்பெரிய மேல்மட்டபாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலம் கட்டப்பட்டு சிறிது காலத்தில் பழுது பட்டு விட்டது. எனவே தரைமட்ட பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையில் தாமிரபரணி வெள்ளப்பெருக்கில் இந்த தரைமட்ட பாலம் முழுவதுமாக மூழ்கி விட்டது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு இந்த தரைமட்ட பாலம் வெளியே தெரிந்தது. இந்த இடத்தினை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பார்வையிட்டார். அவருடன் உமரி சங்கர் உள்பட பலர் இருந்தனர்.


