தாமிரபரணி ஆற்றில் வெள்ள நேரத்தில் உபரி தண்ணீரை வறட்சியான இடத்துக்கு கொண்டு செல்ல நெல்லை மாவட்டம் வெள்ளங்குழி கிராமத்தில் இருந்து வெள்ள நீர்கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் திட்டத்துக்கு தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்டம் என பெயரிட்டு பணிகள் நடந்தது. திசையன்விளை செங்கல் தேரி வழியாக சாத்தான்குளம் வரை இந்த கால்வாய் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் தாமிரபரணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது இந்த வெள்ளநீர் கால்வாயில் 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வெள்ளநீர் கால்வாயில் செல்லும் தண்ணீரில் வேறு எங்கும் உடைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


