தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே தாழ்வான இடத்தில் வாழ்ந்தவர்களை மாவட்ட நிர்வாகம் முகாம் அமைத்து அதில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அடிப்படைவசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆத்தூர் முகாமில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு வந்து வைத்திருந்தனர். அவர்களை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் உமரி சங்கர் உள்பட பலர் வந்தனர்.


