தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கோ.பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (11.12.2024) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் / முதன்மைச் செயலாளர் / ஆணையர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோ.பிரகாஷ் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


