மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.


