தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரத்தம் தேவைபட்டவருக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவலை கேட்டு விரைந்து சென்று உதவிய தனிபிரிவு காவலரை பொதுமக்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முருகன் என்பவரது மகன் கார்த்திக் (23) என்பவருக்கு இரத்தம் தேவைபட்டது. இது சம்மந்தமாக வாட்ஸ்அப் அவரது நண்பர்கள் உதவி கேட்டனர். இதனை கேள்விப்பட்ட முத்தையாபுரம் காவல் நிலைய தனி பிரிவு காவலர் ஜான்சன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரத்ததானம் வழங்கியுள்ளார்.
இச்சம்பவத்தை அங்கிருந்து அனைவரும் பாராட்டினர். இது இவர் இரத்த தானம் வழங்கும் 9வது முறை ஆகும். காவலரது செயலை முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாராட்டினர்.


