கொங்கராயகுறிச்சிக்கு கருங்குளம் ஆற்று பாலம் வழியாக அரசு டவுண் பஸ் விட வேண்டும் என ச.ம.கவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ச.ம.க ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் செய்துங்கநல்லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி சிலுவை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தயளான், மாவட்ட துணை செயலாளர்கள் சங்கர், இஸ்ரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கொங்கராயகுறிச்சிக்கு கருங்குளம் ஆற்று பாலம் வழியாக அரசு டவுண் பஸ்ஸை நெல்லையில் இருந்து விட வேண்டும், அரசர்குளத்தில் பனையில் இருந்து தவறி விழுந்து இறந்த மகாலிங்கம் என்பவர் குடும்பத்துக்கு அரசு உதவி தொகையாக 1 லட்சம் வழங்கவேண்டும், ஜுலை 14 ந்தேதி கருங்குளம் ஒன்றியம் முழுவதும் சரத்குமார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அவை தலைவர் பெருமாள், கிளை நிர்வாகிகள் சபரி செல்வம், சரத் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பார்வதி நாதன் நன்றி கூறினார்.


