தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. தூத்துக்குடி ஏ.வி.எம். ஜீவல்லர்ஸ் ஹாலில் நடந்த இந்த விழாவிற்கு சங்க தலைவர் சங்கர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர்கள் ஜோ.பிராபகர், தமிழ்அரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்கபொதுச்செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


