முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்ட சக்கர நாற்காலி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற பொன் மனிஷா, ஸ்னோஸ் எரிக் ஷெர்லி மற்றும் பத்மநாபன் ஆகியோருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலகுருசாமி, மாநகர அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் அசோகன், 22வது வட்ட திமுக செயலாளர் மனோ மரியதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


