கொங்கராயகுறிச்சியில் போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி கோட்டக் கலால் தாசில்தார் தங்கையா தலைமை வகித்தார். கோட்டக் கலால் தனி வருவாய் ஆய்வாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போதைப்பொருள் மற்றும் தகவல் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மாணவர்கள் , பொதுமக்கள் இடையே வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள், கொங்கராயகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாண்டி பெருமாள், கிராம உதவியாளர்கள் உதவியாளர் கொங்கராயகுறிச்சி ஆனந்த பத்மநாதன் ஆறாம்பண்ணை சரத்குமார் , அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


