செய்துங்கநல்லூர் சேவியர்பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி கோட்டக் கலால் தாசில்தார் தங்கையா தலைமை வகித்தார். கோட்டக் கலால் தனி வருவாய் ஆய்வாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போதைப்பொருள் மற்றும் தகவல் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. கல்லூரி முதல்வர் -ஜான்பால், செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் விஜய மூர்த்தி, கிராம உதவியாளர் சோமசுந்தரம் , துணை முதல்வர் , துறைத்தலைவர், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் மாணவ மாணவிகள் விரிவுரையாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


