தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே ஃபிலிம் பிரிண்டரை சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 1,000க்கு அதிகமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு எக்ஸ்ரே மிகவும் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளில் ஒன்று. கடந்த வாரம் வரை எக்ஸ்ரே எடுக்கும் நோயாளிகளுக்கு அவர்களுக்கான படத்தை உடனடியாக வழங்கி வந்தனர். தற்போது எக்ஸ்ரே எடுக்கும் நோயாளிகளுக்கு படம் வழங்கப்படுவதில்லை.
அதற்கான காரணத்தை கேட்டால் படம் போடப்படும் பிரிண்டர் வேலை செய்யவில்லை எனவும் கடந்த 5 நாட்களாக. இப்படித்தான் இருக்கின்றது என்றும் கூறுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்


