வல்லநாடு இளைய சித்தர் தவத்திரு சாதுசிவா சுவாமிகள் ஐந்தாம் ஆண்டு -குருபூஜை விழா வருகிற 22 ந்தேதி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிசேகம், 7 மணிக்கு கூழ் பூஜை, 8மணிக்கு அகவல் பாராயணம், 9மணிக்கு சமத்துவ விருந்து 12 மணிக்கு குருபூஜை நடைபெறு-ம். குருபூஜையை யொட்டி சுவாமி பத்மேந்திரா சிறப்புரையாற்றுகிறார். மழையூர் சதாசிவம் அய்யா அருட்பா இன்னிசை நடைபெறுகிறது. தலைவர் சொக்கேந்திர பாண்டியன் ஐயா உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். மாலை 5.30மணிக்கு கோ பூஜையும் 6 மணிக்கு நவக்கிரக ஜோதி வழிபாடும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சாது சிதம்பரசுவாமிகள் தொண்டர்குலம் நற்கருங்குழி அருட்பா இசை சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.


