1833 – மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
1848 – ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.
1885 – உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1911 – இத்தாலி ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.
1916 – ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.
1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.
1941 – உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1962 – கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
1972 – ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1993 – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.


