தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (28.09.2024) இன்று வசவப்பபுரம் அருகேயுள்ள கீழப்புத்தனேரி துணை சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை கீழப்புத்தனேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் இசக்கிராஜா துவக்கி வைத்தார். டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்இசக்கி மஹாராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 30 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 30 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர்கள் கிருஷ்டி, கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் முத்து லட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர்கள் நாகம்மாள், ஷாமிலா, சுகாதார தன்னார்வலர் சோபனாதேவி, முத்துவேல், டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன், கிராம வளர்ச்சி அலுவலர் தமிழ்குமார், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


