செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜான்பால் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மருத்துவ அலுவலர் டாக்டர் வேனுகா புகையிலை தீமைகள் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார், வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் பால கண்ணன், பிரசாத், நித்தீஸ், அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுக சேகர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


